சென்னையில் கனமழை pt
தமிழ்நாடு

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. வடபழனி, சைதாப்பேட்டையில் அதிகபட்சமாக மழைப்பதிவு!

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் விடியவிடிய மழை கொட்டித்தீர்த்தது.

Rishan Vengai

சென்னையில் வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 12 செமீ-க்கு மேல் மழை பதிவாகி, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தேங்கும் நீரை அகற்ற மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கையொட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் விடியவிடிய கனமழை கொட்டித்தீர்த்தது. விடியவிடிய கனமழை பெய்தபிறகும் மழை தொடர்ந்துவருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகத்தில் கனமழை

சென்னையில் வடபழனி, சைதாப்பேட்டை, மீனம்பாக்கத்தில் 12 செமீ-க்கு மேல் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. வடபழனியில் அதிகபட்சமாக 13.5 செமீ மழையும், சைதாப்பேட்டையில் 12.7 செமீ மழையும், மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழையும் பதிவாகின. அதேபோல மடிப்பாக்கம் 11.6 செமீ, மதுரவாயல் 11.4 செமீ, வளசரவாக்கம் 11.3 செமீ, நெற்குன்றம் 11 செமீ, நுங்கம்பாக்கம் 10 செ.மீ, அடையாறு 10 செ.மீ மழை என பதிவாகியுள்ளது.

chennai rain

சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேவையான இடங்களில் மின்மோட்டார்களுடன் ஊழியர்கள் தயாராக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.