rain
rain pt desk
தமிழ்நாடு

அதிக கனமழை தொடரும்... தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்

webteam

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

heavy rain

இந்நிலையில், தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக அதிக கனமழை தொடரும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் தெற்கு கேரளாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை மற்றும் விருதுநகரிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீர் ஜான், நேற்று போல் இல்லாமல் அதீத கன மழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

x page

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை முதல் அறிவுறுத்தப்பட்டு 6 PM வரை அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.