“தென் மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் எனவும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் 19ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com