வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நவம்பர் 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மேலும் வலுப்பெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 22ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், 23, 24ஆகிய தேதிகளில் சென்னைக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கடலூர், மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், நாளையும் இவ்விரு மாவட்டங்களில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21ஆம் தேதியன்று, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.