\
கனமழை
கனமழைமுகநூல்

நவம்பர் 17 & 18| தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நவம்பர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் காவிரி படுகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
Published on

காவிரி படுகை மாவட்டங்களில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையிலும் மழை தொடரும் என கூறியுள்ளது.

heavy rain in tamilnadu today on 6 districts
கனமழைpt web

அதேசமயம், வரும் நவம்பர் 17ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வரும் 18ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com