மழை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 12ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

மழை

வரும் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில், மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், குத்தாலம், மல்லியம், தேரிழந்தூர், நீடூர், வில்லியநல்லூர், பட்டவர்த்தி, மணல்மேடு, தருமபுரம், மன்னம்பந்தல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை துவங்கி இடி மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்தது.

மயிலாடுதுறையில் மழை

நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த மழையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் எனவும் விவசாயிகள் வேதையடைந்துள்ளனர். நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.