இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
ஏற்கனவே, தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழக பகுதிகளுக்கு மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.