கனமழை முகநூல்
தமிழ்நாடு

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Angeshwar G

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரையில் கனமழை பெய்யும் என்றும், திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்ட நிலையில், குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.