வானிலை ஆய்வு மையம் முகநூல்
தமிழ்நாடு

இந்த 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை ! - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

' தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

' தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.