திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு... மு.க.ஸ்டாலின் - பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்து தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு. ஏற்கெனவே மாநிலங்களவை இடம் வழங்கப்பட்ட நிலையில் 10 தொகுதிகள் ஒதுக்கியது திமுக.
கூட்டணிக் கட்சிகளைப் போன்றே நாங்களும் விட்டுக்கொடுத்துள்ளோம்... எதிர்பார்த்த தொகுதிகளைவிட குறைவாகவே பெற்றிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி. விருத்தாசலம் உட்பட 25 தொகுதிகளை விருப்பப் பட்டியலாக கொடுத்திருப்பதாக பிரேமலதா பேட்டி... 27ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அறிவிப்பு...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2 பொதுத் தொகுதிகள் உட்பட 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது விசிக... திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் பெற்ற 3ஆவது கட்சியானது விடுதலை சிறுத்தைகள் கட்சி...
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு. அதேபோல, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுத் தொகுதி ஒதுக்கியது அதிமுக.. ராஜபாளையம் தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக ஜான் பாண்டியன் அறிவிப்பு....
தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி... பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக திருமாறன் பேட்டி...
சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக... 297 வாக்குறுதிகளை அறிவித்தார் எடப்பாடி கே.பழனிசாமி... மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும்... தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக வாக்குறுதி...
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது... பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்... பேட்டரி டார்ச் என்பது வெறும் சின்னம் அல்ல; எங்கள் அடையாளம்... தொண்டர்களின் உணர்வுகளை புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்க மாட்டேன் என்றும் கமல்ஹாசன் அறிக்கை... எனக்கு அரசியல் தொழிலல்ல; கடமை... திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக ஸ்டாலினைச் சந்தித்தப் பின் கமல்ஹாசன் பேட்டி...
கமல்ஹாசனின் தியாகம் என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் பதிவு... அவருக்கும், மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் பதிவு...
மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது... 4 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்...
சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதற்கட்ட பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி.... அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்....
திண்டுக்கல்லில் துணை முதல்வர் உதயநிதியின் வாகனத்தை 2ஆவது நாளாக சோதனையிட்ட பறக்கும் படையினர்... கொடைரோடு டோல்கேட்டில் காரை நிறுத்தி 5 நிமிடங்களாக சோதனையிட்ட அதிகாரிகள்...
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்னும் 2 நாட்களில் தவெகவில் இணைய உள்ளதாக ஆதவ் அர்ஜுனா பேச்சு... காங்கிரஸ் தற்போது ஒன்றும் இல்லாமல் போய்விட்டது என விமர்சனம்...
புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கிய திமுக... 3 இடங்களில் தனித்து போட்டி என அறிவித்திருந்த நிலையில் விசிக கேட்ட தொகுதிகளில் ஒன்று ஒதுக்கீடு...
கேரளாவில் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் பாஜக முத்திரை இடம்பெற்ற விவகாரம்... சமூக வலைதள பயனர்களுக்கு காவல் துறை நோட்டீஸ்...
இரண்டு நாட்களில் 5 முறை மாறிய ஆபரணத் தங்கத்தின் விலை... சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதை மறுத்தது ஈரான் வெளியுறவுத்துறை... ட்ரம்ப் கூறியது முற்றிலுமான பொய் செய்தி என சாடல்...
ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேட்டி... அணு ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது என்ற நிபந்தனையை ஈரான் ஏற்றுக்கொண்டதாகவும் விளக்கம்...
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேச்சு... மேற்காசிய போர், ஹோர்முஸ் நீரிணை நிலவரம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தகவல்...
போரை முடிவுக்கு கொண்டுவரவும், பதற்றத்தை தணிக்கவும் வலியுறுத்தி வருகிறோம்... இந்தியாவுக்கு தேவையான எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துவந்துள்ளதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு...
டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு... மேற்காசிய போர் பதற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை...
பிலிப்பைன்ஸில் எரிசக்தி பற்றாக்குறை தீவிரம்... தேசிய அளவில் எரிசக்தி அவசரநிலை அறிவிப்பு...
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் சட்டவிரோதமான மற்றும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள்... நீக்குவதற்கான காலக்கெடுவை, ஒரு மணிநேரமாக குறைக்க மத்திய அரசு ஆலோசனை...
8 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் மட்டுமே ரீஃப்ண்ட்... ரயில்வே விதிகளில் புதிய மாற்றம்; ஏப்ரல் ஒன்று முதல் அமல்...
தெலங்கானாவில் அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்கள் வாங்கினால் சிறப்பு தள்ளுபடி... 20 சதவிகிதம் வரை சலுகை வழங்க பல்வேறு நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம்...
இந்தியாவில் கருணைக்கொலைக்கு அனுமதி பெற்ற முதல் நபரான ஹரீஷ் ராணா காலமானார்... 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தவரின் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரிந்தது...
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையம் அருகே விமான விபத்தில் இருக்கையுடன் தூக்கிவீசப்பட்ட பணிப்பெண்... 300 அடி தூரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட விநோதம்...
ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணி 16ஆயிரத்து 729 கோடி ரூபாய்க்கு விற்பனை.... ஆதித்யா பிர்லா, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வாங்கின....
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு வாங்கியது அமெரிக்க நிறுவனம்... அணியின் புதிய உரிமையாளரானார் தொழிலதிபர் கல் சோமானி...