rcb acquired by aditya birla and toi group for inr 16729
RCBweb

முடிவுக்கு வந்த விற்பனை | ரூ.16,729 கோடி.. RCB-யை வாங்கிய புதிய உரிமையாளர்கள் யார்?

ஆர்.சி.பி. அணியை ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே விற்றுவிட வேண்டும் என அந்த அணி நிர்வாகம் விரும்பி, அதிகாரப்பூர்வமாக ஏலப் பட்டியலிலும் வைத்திருந்தது. அதன்படி, அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டது.
Published on

ஆர்.சி.பி. அணியை ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே விற்றுவிட வேண்டும் என்ற நிலையில், தற்போது அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் தலைமையிலான ஒரு சக்திவாய்ந்த கூட்டமைப்பு, 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 16,729 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது.

19ஆவது ஐபிஎல் தொடரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பல மாற்றங்கள் நடைபெறக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே அணிகளின் பயிற்சிகள் மற்றும் போட்டிகளுக்கு பிசிசிஐ நிறைய விதிமுறைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் விற்பனை பற்றிய செய்திகளும் வெளியாகி இருந்தன. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,285 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.

Rajasthan Royals sold for to US based entrepreneur Kal Somani
ராஜஸ்தான் ராயல்ஸ்எக்ஸ் தளம்

கல் சோமானி, வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் என்.எஃப்.எல்லின் டெட்ராய்ட் லயன்ஸ் அணியின் உரிமையாளர்களான ஹாம்ப் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் கூட்டமைப்போடு ராஜஸ்தான் அணியை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

rcb acquired by aditya birla and toi group for inr 16729
கைமாறும் RCB.. அதிக தொகைக்கு வாங்கும் EQT.. மார்ச் 31க்குள் முடிக்க தீவிரம்!

இந்த நிலையில், ஆர்.சி.பி. அணியை ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே விற்றுவிட வேண்டும் என அந்த அணி நிர்வாகம் விரும்பி, அதிகாரப்பூர்வமாக ஏலப் பட்டியலிலும் வைத்திருந்தது. அதன்படி, அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டது. பெங்களூரு அணியை வாங்குவதற்கான இறுதிப் போட்டியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான EQT உடன் வேறு சில நிறுவனங்களும் போட்டியிட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் தலைமையிலான ஒரு சக்திவாய்ந்த கூட்டமைப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 16,732 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது.

rcb acquired by aditya birla and toi group for inr 16729
RCB IPL Championweb

இவர்களைத் தவிர போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் நிரந்தர தனியார் பங்கு முதலீட்டு உத்தி (BXPE) ஆகியவை அடங்கும். இங்கிலாந்தைச் சேர்ந்த டியாகோ பிஎல்சி-யின் துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) உடன், ஆர்சிபி-யின் முழு 100% உரிமையைப் பெறுவதற்கான ஒரு உறுதியான ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் ஆண்கள் ஐபிஎல் அணியும், பெண்கள் டபிள்யூபிஎல் அணியும் அடங்கும். இது பெங்களூருவை மையமாகக் கொண்ட இந்த பிரபலமான அணிக்கு ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. புதிய கட்டமைப்பின் கீழ், ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குநரான ஆர்யமான் விக்ரம் பிர்லா தலைவராகவும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்கின்றனர். போல்ட் வென்ச்சர்ஸின் நிறுவனரான டேவிட் பிளிட்சர் மற்றும் BXPE-யின் தலைமைச் செயல் அதிகாரியான வைரல் படேல் ஆகியோரும் முதலீட்டாளர் குழுவின் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.

rcb acquired by aditya birla and toi group for inr 16729
RCB-க்கு முன்பே விற்பனை செய்யப்பட்ட RR அணி.. தட்டித் தூக்கிய அமெரிக்க தொழிலதிபர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com