தங்க விலை முகநூல்
தமிழ்நாடு

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!

சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்ட வகையிலேயே இருக்கிறது .. என்னதான் விலை ஏற்றத்தை சந்தித்தாலும், மகளின் திருமணம், சீர்வரிசை என கட்டாயத் தேவைக்கு தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் மக்கள்.

இந்தநிலையில், சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன்படி, சென்னையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,045-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,360-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக உள்ளது.