தங்கம்  web
தமிழ்நாடு

கடந்த வாரம் சரிவு.. இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

Prakash J

கடந்த ஜனவரி 29ஆம் தேதி, எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. அன்று மட்டும், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற அடுத்த உச்சத்தைத் தொட்டது. ஆனால் அடுத்து வந்த நாட்களில் தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள், வெனிசுலா மீதான படையெடுப்பு, ஈரான் உடனான போர்ச் சூழல் உள்ளிட்டவை தங்கம், வெள்ளி முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தது. அதிலும், கடந்த ஜனவரி 29ஆம் தேதி, எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. அன்று மட்டும், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற அடுத்த உச்சத்தைத் தொட்டது. ஆனால் அடுத்து வந்த நாட்களில் தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது.

தங்கம்

தங்கம், வெள்ளி விலை சரிவுக்குக் காரணம் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் தொடர்பான பரிந்துரையே எனக் கூறப்பட்டது. கெவின் வார்ஷ் என்பவரை அமெரிக்க ரிசர்வ் வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்க அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்ததே விலை சரிவுக்குத் தூண்டுதலாக அமைந்ததாக நிபுணர்கள் கூறினர்.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

தங்கம்

அதேநேரத்தில், தங்கம் விலையில் தற்போது காணப்படும் மாற்றம் தற்காலிகமானது என்றும், நடப்பு ஆண்டில் தங்கம் விலை தொடர் ஏற்றத்தைக் காணும் என்றும் சர்வதேச நிதி நிறுவனமான யுபிஎஸ் தெரிவித்துள்ளது. உலகச் சந்தையில் தங்கத்தின் ஏற்றம் இன்னும் முடியவில்லை. குறுகிய காலகத்தில் தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டாலும், நடப்பு ஆண்டின் மத்திக்குள் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் சவரன் 1 லட்சத்து 44 வரையிலும் ஏற்றம் காணும். வெள்ளி விலை தொடர் ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.