தங்கம் விலை முகநூல்
தமிழ்நாடு

தங்கம் வாங்க சரியான நேரம்... இறங்கிய தங்கம் விலை!

அமெரிக்க சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருப்பதால், இந்திய சந்தையிலும் இந்த மாற்றங்கள் விரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

karthi Kg

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்திருக்கிறது. கிராமிற்கு 65 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு சவரன் 56, 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்க சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருப்பதால், இந்திய சந்தையிலும் இந்த மாற்றங்கள் விரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் தங்கம் 3% வரை குறைந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்தியாவிலும் இது நிச்சயம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெட் ரேட் கட், டாலரின் எழுச்சி, டிரம்ப், போன்ற பல காரணங்கள் இந்த வீழ்ச்சிக்கு பின்னால் இருப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய fed முடிவுக்கு பிறகு US dollar index இரண்டு ஆண்டு உச்சம் நோக்கி நகர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் 25 புள்ளிகள் வரை ரேட் கட் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக கடந்த முப்பது நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த விலை நோக்கி தங்கம் கீழ் இறங்கியிருக்கிறது. 2.1% குறைந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 2,589.91 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிவருகிறது. முப்பது நாட்களுக்கு முன்னர் , அதாவது நவம்பர் 18ம் தேதி தங்கம் ஒரு அவுன்ஸின் விலை $2,653.30.

வெள்ளியின் விலையும் 3.5% குறைந்திருக்கிறது. சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 7,135 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் 57,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31ம் தேதி தங்கம் கிராம் விலை 7455 ரூபாய்க்கு வர்த்தகமானது. தங்கத்தின் விலையானது கடந்த மூன்று மாதங்களாவே ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்லாத்தன்மை அடுத்த ஆண்டு டிரம்ப் பதவி ஏற்கும் வரை தொடரும் என நம்பப்படுகிறது. அதே சமயம் , தங்கம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சவரன் 70000 வரை உயரலாம் என நம்பப்படுகிறது. நிலையில்லாத்தன்மை நீடிக்கும் சூழலில், தங்கத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யாமல், அவ்வப்போது விலை குறையும் போது, சிறுக சிறுக தங்கத்தை சேமிப்பதே சிறந்த வழி என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இந்த வாரத்தின் மீதி நாட்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1000 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.