Jayakumar
Jayakumar pt desk
தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் எத்தனை முறை ரோட் ஷோ நடத்தினாலும் பாஜகவின் வாக்கு வங்கி உயராது” – ஜெயக்குமார்

webteam

செய்தியாளர்: வண்ணை ரமேஷ்குமார்

வடசென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓட்டேரி பகுதியில வீதி வீதியாக பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்...

“எங்கு பார்த்தாலும் மக்கள் அதிமுகவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சிறப்பான அடிப்படை வசதி பெற்றிருந்தது. மேலும் நல்ல கட்டமைப்போடு அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் அப்படியல்ல. தஞ்சாவூரில் பாடசாலை நடத்தி வரும் பிராமணரை திமுகவினர் தாக்கி இருக்கின்றனர். இதற்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஜெயக்குமார்

தேசிய கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் வளர்ச்சி இல்லை. பாஜகவினர் பிரதமர் மோடியை முன்னிறுத்துகிறார்கள், வட மாநிலம் வளர்ச்சியடைந்து விட்டதா? காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதா?” என்றார்.

தொடர்ந்து அவரிடம் ‘இபிஎஸ் தலைமையிலான அதிமுக, மக்களவை தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

“பாஜகவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார். ஆனால், அண்ணாமலை காணாமல் போய்விடுவார்” என்றார்.

பின் பேசுகையில், “2026ல் பாமக தலைமையில் ஆட்சி என்று அன்புமணி கூறியது, இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடி. அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடியது. ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு கிடையாது. அவரது ஓட்டு அதிமுகவுக்குதான் கிடைக்கும்.

டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்த விட மாட்டோம். பாஜக எத்தனை முறை ரோட் ஷோ நடத்தினாலும் அவர்களுக்கு வாக்கு வங்கி அதிகரிக்காது.

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி புகார் அளித்து வருகிறோம். நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். பாஜகவின் தேர்தல் அறிக்கை காகிதப்பூ. அது மலர் ஆகாது” என்றார்.