ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் கைது web
தமிழ்நாடு

சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக புகார்.. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் கைது!

சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக, ஜெம்ஸ் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி பல சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் வீரமணியையும், குற்றங்களுக்கு உதவியதாக அவரது கூட்டாளிகள் சாந்தி மற்றும் மகேந்திர சிம்கனையும் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தற்போது முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக, வீரமணி மீது காவல் துறையிடம் வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், வீரமணியையும், குற்றங்களுக்கு உதவியதாக அவரது கூட்டாளிகள் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரையும் கைது செய்தனர்.

இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வீரமணி பல சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இதுதொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.