A low-pressure area formed over the Bay of Bengal web
தமிழ்நாடு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!

வடமேற்கு வங்கக் கடலில் உருவான தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

PT WEB

வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பலவீனமாக இருந்த தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.