ப சிதம்பரம் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்கும்” - நெல்லை காங்கிரஸ் மாநாட்டில் ப.சிதம்பரம் பேச்சு!

தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாடு நடைபெற்றது. 'வாக்கு திருட்டை தடுப்போம் - ஜனநாயகத்தை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த மாநாட்டில், பல்வேறு பிரச்னைகள் குறித்து ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோடி தலைமையிலான அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளது; ஆகவே உடனடியாக பதவி விலக வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தாமிரபரணி நதி தூய்மைப்படுத்தப்பட வேண்டும், ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கையை தடுத்து தமிழ் நாகரிகத்தை உலகிற்கு அறியவிடாமல் தடுக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வாக்கு திருட்டைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என உறுதிமொழியும் மாநாட்டில் எடுக்கப்பட்டது.

p chidambaram

/ ழ்க்ஷ்இம்மாநாட்டில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்புள்ளதாக திடுக்கிடும் தகவலை வைத்தார்.

இதுகுறித்து அவர், “மகாதேவ்புரா நாடாளுமன்ற தொகுதியில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் முன்னணி என தேர்தல் ஆணையம் சொன்னதை ஆராய்ந்து தான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்ததை வெளிக்கொண்டுவந்தார். இதனை எல்லாம் அம்பலபடுத்திய பின்னரும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதியை இழந்தது. போலியான முகவரியை சேர்ப்பது,போலியான நபர்களை சேர்ப்பது போன்ற வகையில் வாக்கு திருட்டு நடத்தப்பட்டது. அவர்கள் பேரில் கட்சியினர் வாக்களித்து தேர்தல் நடந்தது. இப்படி பல மோசடிகள் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற தகவல்கள் இயற்கைக்கு எதிரானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் குடிபெயர்ந்து விட்டனர், காணாமல் போய்விட்டனர், மறைந்துவிட்டனர் என தேர்தல் ஆணையம் இயற்கைக்கு மாறான தில்லுமுல்லு செய்துள்ளது.

p chidambaram

வாக்கு திருட்டு மகாராஷ்டிரா, கர்நாடக போன்ற மாநிலங்களில் நடந்ததுபோல் தமிழகத்திலும் நடக்கலாம். தமிழகத்தில் சதியை பின்னக்கூடிய பாரதிய ஜனதா கட்சி உள்ளது. தமிழகத்தில் அதனை நடக்க விடமாட்டோம். அதேபோல் கேரளாவிலும் நடக்காது. நாம்தான் வலிமையான அணி.` அதற்கு எதிரான அணி பலவீனமான அணி எனச் சொல்லக்கூடாது. திமுக தமிழகத்தில் வலிமையான அணி அதிமுக வலிமையை குறைத்து மதிப்பிட மாட்டேன். தமிழகத்தில் கட்டுக்கோப்பான அணிகள் உள்ளன. தமிழகத்தில் திமுக அணி, அதிமுக அணி என இரண்டு அணிகள் இருந்தால் வாக்கு திருட்டு நடக்காது. ஆனால் தற்போது அதிமுக அணியில் பாஜக புகுந்து உள்ளது. ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது என தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல் பாஜக புகுந்த வீடு உருப்படாது. அவர்களது கூட்டணி உருப்படாது. தமிழகத்தில், வாக்கு திருட்டு நடப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. மே மாதம் வரை தமிழகத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்கு திருட்டுக்கான காரணம் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்துள்ளதுதான். தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. இன்னும் 8 மாதங்கள் விழிப்புடன் இருந்து வாக்குத்திருட்டை தடுத்து தமிழகத்தில் நியாயமான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.