முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.
1948ஆம் ஆண்டு கருணாநிதி - பத்மாவதி தம்பதியருக்கு பிறந்த மு.க.முத்து, 1970இல் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். ’பூக்காரி’, ’பிள்ளையோ பிள்ளை’, ’சமையல்காரன்’, ’அணையா விளக்கு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள அவர், பல பாடல்களையும் பாடி உள்ளார். இறுதியாக தேவா இசையிலும் ஒரு பாடல் பாடியிருந்தார். இந்த நிலையில், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னையால் காலமான அவரின் உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்துவின் மறைவைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.