Faro Focus மூலம் கரூரில் ஆய்வு web
தமிழ்நாடு

41 பேர் உயிரிழந்த இடம்.. 2.30 மணி நேரம் Faro Focus மூலம் ஆய்வு! Faro Focus கருவி என்றால் என்ன?

கரூரில் 41 பேர் உயிரிழந்த குறிப்பிட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக Faro Focus மூலம் ஆய்வு நடத்தினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 12-30 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் ஆய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

PT WEB

கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். FARO Focus கருவி மூலம் சம்பவ இடத்தில் 2.30 மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கருவி 3D லேசர் ஸ்கேனர் ஆகும், இது குற்றம் நடந்த இடங்களை விரைவாக ஸ்கேன் செய்து, துல்லியமான தரவுகளை பதிவு செய்ய உதவுகிறது.

கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் பரப்பரை மேற்கொண்டார். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்த வழக்கை சிபிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை எஸ்பி பிரவீன் குமார் தமைமையில் 12 அதிகாரிகள் சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தவெக தலைவர் பரப்புரை

தொடர்ந்து Faro Focus என்ற கருவி மூலம் விஜய் பரப்பரை மேற்கொண்ட குறிப்பிட்ட இடத்திலிருந்து இருபுறமும் 500 மீட்டர் தொலைவிற்கு இந்த ஆய்வு மேற்கொண்டனர். நேற்று சுமார் 5:30 மணி நேரம் ஆய்வு செய்து அதன் பிறகு மாலை ஆகிவிட்டதால் ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

இன்று காலை மீண்டும் 7 மணிக்கு சிபிக அதிகாரிகள் அதே Faro Focus கருவி மூலம் ஆய்வு பணியை தொடங்கினர். 41 பேர் உயிரிழந்த அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சுமார் 2:30 மணி நேரம் அந்த Faro Focus கருவி மூலம் ஆய்வு நடத்தினர்.

FARO Focus என்றால் என்ன?

FARO Focus என்பது உலகப் பிரபலமான ஒரு 3D லேசர் ஸ்கேனர் ஆகும். இந்தப் பொருள் லேசர் வெளிச்சத்தைப் பயன்படுத்தி ஒரு பகுதியை விரைவாக ஸ்கேன் செய்து, அதில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் (millions of points) பொருத்தமான இடத்தில் பதிவு செய்து “பாய்ண்ட் கிளவுட் (point cloud)” என்ற 3-பரிமாண டிஜிட்டல் நகலை உருவாக்கும். இது ஒரு அறை, ரோடு பகுதி, வாகனம் அல்லது முழு குற்றச்சாலையாக கூட இருக்கலாம்.

FARO Focus

CBI போன்ற தேசியத் தரப்பினர் குறிப்பாக கடுமையான குற்றங்கள், விபத்துக்கள், பயங்கர சம்பவங்கள் போன்றவை நடைபெறும் போது இந்த 3D லேசர் ஸ்கேனர்களை பயன்படுத்துவதன் மூலம் (on-scene)-ஐ விரைவாக பாதுகாத்து, குற்றவாளிகள் தடயத்தை அழிக்கும் வாய்ப்புகளை குறைத்து, சான்றுகளை அசல் நிலையிலேயே பதிவு செய்து, பின்னர் ஏதேனும் புதிய விசாரணைத் தேடல்கள் செய்யும்போது எண்ணிக்கைக் குறைபாடுகள் இல்லாமல் துல்லியமான தரவுகளை மீண்டும் அணுக முடியும்.

காயமுற்ற இடங்கள், ரத்தச் சிதறல்கள், துப்பாக்கி தடங்கள், வாகன நிலைமைகள் போன்றவை குறித்து கணிதபூர்வமாக புலனாய்வு செய்ய, நீதிமன்றத்தில் தரமான நுட்பமான visual evidence-ஆக் கொண்டு சென்று விளக்குவது போன்ற பல காரணங்களுக்காகப் பயன்படுகிறது.

FARO Focus

இவை அனைத்தும் வழக்காய்வு சான்றுகளாக மிகப் பயனுள்ளதாக இருக்கும். FARO-விதமான ஸ்கேனர்-கள் பொதுவாக போலிஸ், என்ஃபோர்ஸ்மெண்ட் அணி-களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கரூரில் இரண்டாவது நாளாக ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..