மகளிர் பேருந்து பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக அமைச்சர் எ. வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். “பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே அவர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறார்” என தனது அறிக்கையில் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துவிட்டதாக பட்டியலிட்ட எ.வ.வேலு பாஜகவின் ஓட்டு வங்கி சேதாரமடைந்து விடக்கூடாது என்பதால் இடைத்தேர்தலில் இருந்து அதிமுக பின்வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது உறவினர் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை தன் வீட்டுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில், நீட் தேர்வை ரத்து செய்யாத பாஜக குறித்து பேச எடப்பாடி பழனிசாமி அஞ்சுவதாக சாடி உள்ளார் அமைச்சர்.
மேலும் மகளிர் இலவச பேருந்துக்கு லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள் என ஒட்டுமொத்த மகளிரையும் இழிவுபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளதாக எ. வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.