மூட்டு வலியால் படுத்த படுக்கையான நெல்லையப்பர் கோயில் யானை – மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை
நெல்லையப்பர் கோயில் யானைக்கு தீவிர சிகிச்சைpt desk

மூட்டு வலியால் படுத்த படுக்கையான நெல்லையப்பர் கோயில் யானை – மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, மூட்டு வலி பிரச்னையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கிரேன் உதவியுடன் அதற்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
Published on

செய்தியாளர்: மருதுபாண்டி

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதி, கடந்த 1985 ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது யானைக்கு 56 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக காந்திமதி யானைக்கு மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

மூட்டு வலியால் படுத்த படுக்கையான நெல்லையப்பர் கோயில் யானை – மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை
மூட்டு வலியால் படுத்த படுக்கையான நெல்லையப்பர் கோயில் யானை – மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை

இந்நிலையில், காந்திமதி யானைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டு வலி தொடர்பான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூட்டு வலி அதிகமான நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக யானை காந்திமதி படுக்காமல் நின்றவாரே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது.

மூட்டு வலியால் படுத்த படுக்கையான நெல்லையப்பர் கோயில் யானை – மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை
பொங்கல் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்... ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இந்நிலையில் இன்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில் மீண்டும் அதனால் எழ முடியவில்லை. இதனால் உடனடியாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து யானை காந்திமதிக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து கிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com