செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் பவானி வி.எம்.சி நகரில் வசித்து வரும் குரு என்பவரின் உறவினரான திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த 17 வயது சிறுவன், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு அந்த சிறுவன், குருவின் காரை எடுத்துக் கொண்டு பவானியில் இருந்து மேட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜல்லிக்கல்மேடு என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த கீத்துக் கொட்டகையில் புகுந்தது.இதில் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த கற்பகவல்லி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அந்த சிறுவன் மீட்கப்பட்டு, பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.