திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், நீண்ட நேரமாகியும் சில இடங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனையடுத்து பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது யாரும் இல்லாத நிலையில், தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருந்தது.
அண்ணே என கூப்பிட்டுப் பார்த்தும் யாரும் பதிலளிக்கவில்லை. பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் கூப்பிட்டும், கதவை தட்டிப்பார்த்தும் எழுந்திருக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.