தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மரக்காணம் அருகே 11 வயது சிறுமி மீது 62 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடை வாங்கி வரச் சொல்லி அழைத்து சென்று சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. தாயிடம் கூறிய சிறுமியின் புகாரின் பேரில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த ஒரு வாரமாக பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை சார்ந்த குற்றங்கள் அதிகமாக வெளிப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வி அதிகமாக எழுப்பப்பட்டு வருகிறது. கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரக்காணம் அருகேயுள்ள வண்டிபாளையம் பகுதியை சார்ந்த முதியவர், அதே பகுதியை சார்ந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கன்னியப்பன் என்ற 62 ஆசாரியை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் கைது செய்தது.
மரக்காணம் நடுக்குப்பம் அடுத்த வள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (62 வயது), இவர் ஆசாரி வேலை செய்து வருகிறார். சில சமயங்களில் அவர் வைத்திருக்கும் கால்நடைகளை அவர் பராமரித்து வரும்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவியை அழைத்து அருகில் உள்ள கடையில் வடை வாங்கி வர சொல்லி இருக்கிறார். அந்த சிறுமி வாங்கி வந்துள்ளார் பின்னர் அந்த சிறுமிக்கு வடையை கொடுத்து அருகில் அமர வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியநிலையில், அவரது தாய் அளித்த புகாரியின் பேரில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து கன்னியப்பனை கைது செய்தனர்.