எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் Twitter
தமிழ்நாடு

“ஆ.ராசா, கனிமொழி கைதின்போதுகூட இவ்வளவு ஆர்ப்பாட்டமில்லை” - EPS பதில் வீடியோ!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

PT WEB

நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோவொன்றை வெளியிட்டு பாஜக மற்றும் அதிமுக-வினர் மீது தனது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பேசியிருந்த முதல்வர், அதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக அரசை விமர்சித்திருந்தார். அச்செய்தியை முழுமையாக இங்கு அறியலாம்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர் என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், ''செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதலமைச்சர். முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்? ஆ.ராசா, கனிமொழி கைதின்போதுகூட இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி'' என்று பேசியுள்ளார்.

இதுபற்றிய முழு விவரத்தையும், வீடியோவையும் இங்கு அறியலாம்:

இதேபோல முதல்வரின் கருத்துக்கு பாஜக சார்பில், தமிழக தலைவர் அண்ணாமலையும் அறிக்கை வழியாக பதில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியவற்றை, இங்கே காணலாம்: