செய்தியாளர்: அ.ஆனந்தன்
பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து நாட்டுப் படகில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமின் ஐஸ் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூபாய் ஒரு கோடி என்று அதிகாரிகள் தெரிவத்தனர்.
இது தொடர்பாக படகில் இருந்த ஜீவா, ஹென்சி ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகு மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரித்து வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.