சென்னை பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட சோதனையோட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 2 கட்ட சோதனை ஓட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாம் கட்டமாக, போரூர் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 3 ஆம் கட்டமாக மொத்தம் 9.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முதல் இரண்டு முறையில் சோதனை நடந்த நிலையில், முதல் முறையாக DOWN LINE ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் ஐ.ஏ.எஸ்., 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும், அடுத்ததாக படிப்படியாக பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.