HEADLINES|பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் முதல் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன் வரை!
நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். தியாகத் திருநாளையொட்டி மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.
கனடாவில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு. கனடா பிரதமர் கார்னியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக எக்ஸ் தளத்தில் மோடி பதிவு.
மத்திய பாஜக அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருப்பதாக முதல்வர் மு. க.ஸ்டாலின் கண்டனம்.
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால் எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதே என முதல்வரின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதில்.
தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி. தனிப்பட்ட அரசியலுக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர், தங்களுக்கு போதிக்க எந்த உரிமையும் இல்லை என்றும் காட்டம்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதுரை வருகை. சட்டப்பேரவை தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் நாளை ஆலோசிக்க இருப்பதால் முக்கியத்துவம் பெறும் பயணம்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம். காணொளி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு . இணை நோய் மற்றும் இருதய பிரச்சினை இருந்ததாக மாவட்ட சுகாதாரத் துறை விளக்கம்... கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல். கட்டாயம் இல்லாவிட்டாலும், தங்கள் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிவது நல்லது என அறிக்கை.
பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி. Down line-இல் முதல் முறையாக 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் அடுத்த மாதம் 7ஆம் தேதி மகா குடமுழுக்கு விழா. காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் விசாரிக்கப்படும் என காவல் துறை தகவல்.
புதிய அரசியல்கட்சியை தொடங்குவது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் திட்டம். அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதல் ஏற்பட்ட நிலையில், மக்களிடம் கருத்துக் கேட்பு.
நார்வே செஸ் தொடரில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன். இறுதிச்சுற்றில் அமெரிக்க வீரர் கருவானாவிடம் தோல்வியடைந்த குகேஷ் மூன்றாமிடம் பிடித்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சின்னர். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ் - சின்னர் மோதல்.
பெரும் வரவேற்பை பெற்ற முத்தமழை பாடலை திரைப்படத்தில் வைக்காதது ஏன்?. இயக்குநர் மணிரத்னம் அளித்த பிரத்யேகத் தகவல்.
தீப்பற்றி எரியும் பாராசூட்டுடன் 16 முறை கீழே குதித்து ஸ்டன்ட். புதிய கின்னஸ் சாதனை படைத்தார் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ்.