தவெக துண்டை அணிந்து அரசு பேருந்து இயக்கம் pt
தமிழ்நாடு

தவெக துண்டை அணிந்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..! வீடியோ வைரல்!

தமிழக வெற்றிக்கழக கட்சியின் துண்டை அணிந்துக்கொண்டு அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

PT WEB

ஓசூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்தை ஓட்டிய ராஜா என்ற ஓட்டுநர், ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் தவெக துண்டை அணிந்து பேருந்தை இயக்கிய காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், அவர் துண்டை கழற்றி, தெரியாமல் நடந்த தவறாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

ஓசூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு சொகுசு பேருந்தை, ஓட்டுநர் ராஜா என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். அப்பொழுது பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்த போது, பேருந்து ஓட்டுநர் ராஜா தமிழக வெற்றிக்கழக கட்சியின் துண்டை அணிந்துக்கொண்டு, பேருந்தை இயக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதும், கழுத்தில் இருந்த கட்சி துண்டை கழற்றிவிட்டு, தெரியாமல் நடந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் கட்சி துண்டை அணிந்து பேருந்து ஓட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.