திருப்பூர்  புதியதலைமுறை
தமிழ்நாடு

”அரக்கன் மாதிரி நடந்திருக்கிறான் அந்த பையன்; சொல்லவே முடியல..” - கதறும் புதுமணப்பெண்ணின் தாய்!

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்நிலையில், இதுகுறித்து வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க சிலவற்றை தெரிவித்திருக்கிறார். அதில், ” மிருகம் கூட மிருகத்தை துன்புறுத்தாது. ஆனாl, என் மகளிடத்தில் அரக்கன் மாதிரி நடந்திருக்கிறான் அந்த பையன். எனது பெண்ணை மன ரதியாக துன்புறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். என் பிள்ளை ஒழுக்கத்தில்தான் தப்பா?... என் பிள்ளையிடம் சொல்லிதான் அனுப்பினோம். துணி கேட்காதே, பணம் காசு கேட்காதே ஒரு பிள்ளையை வைத்திருக்கிறார்கள் நீதான் பண்பாக நடக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிதான் அனுப்பினோம். அந்த பையனை என் மகனை போலதான் நினைத்தேன். வெளியில் எங்களிடத்தில் சிரித்து சிரித்து பேசி, உள்ளே என் மகளை சித்திரவதை செய்திருக்கிறான்.

உன் அப்பா, அம்மாவிடம் இதை பற்றி சொன்னால், கை , காலை அறுத்துக்கொள்வேன் என்று சித்தரவதை செய்திருக்கிறான். அப்பா அம்மா கஷ்டப்படக்கூடாது என்று மனதின் உள்ளே வைத்து என் மகள் சித்திரவதையை அனுபவித்திருக்கிறாள்.” என்று தெரிவித்துள்ளார்.