ஆ.ராசா  pt
தமிழ்நாடு

’ திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றிப்பொட்டை அழித்துவிட வேண்டும் ’ - ஆ.ராசா

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

PT WEB

திமுக கரை வேட்டி கட்டிவிட்டால், நெற்றியில் பொட்டு இருந்தால் அதை அழித்துவிட வேண்டும் என்று, திமுக எம்பி ஆ.ராசா பேசியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுகவின் துணை பொது செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கடவுள் மீது நமக்கு கோபம் இல்லை; யார் வேண்டுமானாலும் கடவுளி கும்பிடலாம். ஆனால், நீங்களும் பொட்டு வைத்து கையில் கயிறு கட்டிக்கொண்டால் சங்கி யார் என தெரியாது. விபூதி கூட வைத்துக்கொள்ளுங்கள்; திமுக வேட்டி கட்டிவிட்டால் அதை அழித்துவிடுங்கள். கொள்கை இல்லாமல் செயல்படும் கட்சி அழிந்துபோய்விடும். அதிமுகவும் அதுபோன்ற கட்சிதான்." என்று விமர்சித்துள்ளார்.