கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு!
தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் விளைபொருளான கும்பகோணம் வெற்றிலைக்கும், பூ மாலையான தோவாளை மாணிக்கமாலைக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பல நூறு ஆண்டுகளாக பயிரிடப்படும் கும்பகோணம் கொளுந்து வெற்றிலை, பல நோய்களை குணப்படும் மருத்துவத் தன்மை கொண்டிருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் செய்யப்படும் தோவாளை மாணிக்கமாலையும் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுள்ளது. வெள்ளை அரளி, சிவப்பு அரளி, பச்சை நொச்சி, சம்பா நார் கொண்டு, வழக்கமான மாலை போல இல்லாமல், பட்டையான வடிவத்தில், தோவாளை மாணிக்க மாலை செய்யப்படுகிறது. இந்த வகைகளில் தனித்துவம் கொண்ட கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடுக்கான வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, தஞ்சையில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.