ஆதவ் அர்ஜுனா - செல்வப்பெருந்தகை - அனிதா ராதாகிருஷ்ணன் web
தமிழ்நாடு

காங்கிரஸ் MLA-க்களை கொச்சையாக சாடிய திமுக எம்.எல்.ஏ.! ஆதவ் சட்டையை கிழிப்போம் என எச்சரிக்கை!

உங்களை போன்ற துரோகிகள் நாட்டில் உண்டா என காங்கிரஸ் கட்சியை திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.

PT WEB

திருச்செந்தூர் நன்றி கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கினார். ராகுல் காந்தி பிரதமர் ஆக முடியாது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை இல்லாத நிலைக்கு கொண்டு வருவோம் என எச்சரித்தார். துரோகம் செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மக்கள் கருப்புக் கறை பூசுவார்கள் என்றும் விமர்சித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் திமுகவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Anitha Radhakrishnan

அப்போது பொதுமக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது உள்ள சூழலில் அந்த நடிகரைப் பற்றி பேசுவதை விட நம்மிடமிருந்து பிரிந்து சென்ற அந்த துரோகிகளை பற்றி பேச வேண்டாமா? உங்கள் தலைவர் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று கூறிய எங்கள் தலைவரை மறைந்து விட்டாயா. அதை மறந்த காங்கிரஸ் துரோகிகளே, உங்களைப் போல் துரோகி நாட்டில் உண்டா என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கடுமையாக சாடினார்.

மேலும், இனி ராகுல்காந்தி அடுத்த பிரதமர் என்று சொன்னால் அவர் எப்படி வர முடியும். எப்படி வருவார். ராகுல் காந்தி அவர்களே தமிழ்நாட்டு மக்கள் இனி உங்கள் முகத்தில் கருப்பை பூசுவார்களே தவிர இனி ஒரு காலமும் உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களது பாட்டி இந்திரா காந்தி அவர்களையே சந்தித்த திராவிடர் முன்னேற்ற கழகம் எவ்வளவு பெரிய துரோகம் செய்து உள்ளீர்கள். எப்படி ஓடிப்போய் இந்த ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்தீர்கள். பொ** பயலாக இருந்தால் நீங்கள் தேர்தலுக்கு முன்பே நாங்கள் உங்களோடு கூட்டணி வைக்கவில்லை என்று கூற வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு எங்கள் இயக்கத்துடன் சேர்ந்து எங்கள் இயக்கத் தோழர்கள் கஷ்டப்பட்டு உங்கள் ஐந்து பேரை வெற்றி பெற வைத்தால் ஓடிப்போய் சேர்கிறீர்களே.

ராகுல் காந்தி - முக ஸ்டாலின்

கேசி வேணுகோபால் என்ன கடவுளா. எங்கேயோ டெல்லியில் இருந்து மாமா வேலைப் பார்த்த அவர் கேரளாவிற்கு சென்று முதல்வர் வேண்டுமென்று கேட்டால் கொடுப்பார்களா. திமுகவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் சோடங்கர். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறீர்களா? கனவு காணாதீர்கள் எங்கள் தலைவர் இருக்கின்றார். எங்கள் இளம் தலைவர் இருக்கின்றார். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் என்று யார் வந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம்” என்று கடுமையாக சாடினார்.

ஆதவ் அர்ஜுனா சட்டையை கிழிப்போம்..

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது லாட்டரி காரன் ஒருவன் முளைத்திருக்கிறான். அவன் எங்கள் இளம் தலைவரை தொட்டுப் பார்க்கிறான். அட நாயே யாரை தொட்டு பார்க்கிறாய். இனி இது போல் நீ பேசினால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு நீ வரும் போது உனது சட்டையை கிழிக்கக்கூடிய நிலையை எங்கள் தொண்டர்கள் உருவாக்குவார்கள். நீ அரசியல் பேசு, எங்களை குறை கூறு. நாங்கள் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு கொடுத்து வந்தோம், நீ 2500 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னாய் கொடுத்தாயா? அதை விட்டுவிட்டு எங்கள் இளம் தலைவரை தொட்டுப் பார்க்கிறாயா.

ஆதவ் அர்ஜுனா

வருகின்ற காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சியை இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று தெரிவித்தார். நன்றி என்று கூறிவிட்டு கிளம்பிய அவர் மீண்டும் பேசியபோது, அண்ணனோட இப்படி ஒரு பேச்சை கேட்டு ரொம்ப நாளாச்சா என்று கேட்டு விட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி நன்றி என்று தெரிவித்தார்.