பாஸ்கு திருவிழா pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | விமர்சையாக நடைபெற்ற புனித வியாகுல அன்னை தேவாலய 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்ரம் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல்லை சுற்றியுள்ள 96 கிராமங்களின் தாய் கிராமமாக விளங்ககும் மேட்டுப்பட்டியில், மிகவும் பழமையான புனித வியாகுல அன்னை தேவாலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகையின் போது, பாஸ்கு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பாஸ்கு திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு (வெள்ளிக்கிழமை) 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான இயேசு சிருஸ்துவின் பாடுகளின் பாஸ்க நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை நடைபெற்ற தூம்பா ஊர்வலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திவாறு கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பேய் பாஸ்குவும் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழும் காட்சிகளும் நடைபெற்றது.

இதையடுத்து இன்று காலை ஏழு சப்பரங்கள் ஊர்வலமும் நடைபெற்றது. இதில், உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் தூதுவர்களான வியாகுல அன்னை, சூசையப்பர், அந்தோணியார், செபஸ்தியார், சவேரியார், சந்தியாகப்பர், ஆகியோரின் ஏழு சப்பரங்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் மேட்டுப்பட்டி தேவாலயத்திற்கு இன்று மாலை வந்தடையும். அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் சப்ரத்தின் மீது பூக்கள் மிளகு உப்பு ஆகியவற்றை தூவி இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.