செய்தியாளர்: திவ்யஸ்வேகா
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், பேக்கரியில் வைத்திருந்த சமையல் சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மின் கசிவு காரணமாக மின் வயர்கள் பட்டாசு போல் வெடித்தது.
இதையடுத்து கடையின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களிலும் தீப்பற்றி எரிந்தது. அதிஷ்டவசமாக தீப்பற்றியவுடன் அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.