சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி
சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளிpt desk

திண்டுக்கல் | விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லையே.. சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி!

வத்தலக்குண்டு அருகே விலை கிடைக்காததால் விற்பனையாகாத தக்காளிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள்...
Published on

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது தற்போது வரத்து அதிகமாக இருக்கின்ற காரணத்தால் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது. இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் 1 கிலோ தக்காளியை நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மொத்த வியாபாரிகள் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியை ரூ.60 முதல் ரூ.150 வரை மார்க்கெட் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். தரத்திற்கு ஏற்றவாறு 1 கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது இதனிடையே உள்ளுர் தக்காளியை தொடர்ந்து ஆந்திராவில் இருந்தும் தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது இதனால் வத்தலக்குண்டு தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது

சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி
சேலம் | மகா மாரியம்மன் கோயில் திருவிழா – வித விதமான அலகு குத்தி கிரேனில் தொங்கிய படி வந்த பக்தர்கள்

இதையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளிகள் விற்பனை ஆகாமல் சேதமடைகின்றன. இதனால் நாள்தோறும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது தற்போது சேதமடைந்த தக்காளிகளை விவசாயிகளும், வியாபாரிகளும் பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்று சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com