ஆடுகள் பலி pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: வெறிநாய்கள் கடித்து கூடாரத்தில் அடைக்கப்பட்டிருந்த 25 ஆடுகள் பலி

ஒட்டன்சத்திரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 25 ஆடுகள் உயிரிழப்பு.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொங்கபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகசந்தரம். இவர், கடந்த 40 வருடங்களாக பட்டணா என்ற இனத்தைச் சேர்ந்ண ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்க்கச் சென்ற அவர், சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 25 ஆடுகளை கூடாரத்தில் அடைத்து வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

ஆடுகள்

இந்நிலையில் கூடாரத்தை நோட்டமிட்ட வெறி நாய்கள் கூடாரத்திற்குள் புகுந்து 25 ஆடுகளை கடித்துக் குதறியுள்ளது. ஆடுகளின் சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்தவர், நாய்களை விரட்டியுள்ளார். இருந்த போதிலும் அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இச்சம்பவம் குறித்து அறிந்த ஆடுகளின் உரிமையாளர் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மனவேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.