கஞ்சா பறிமுதல் - ஒடிசாவைச் சேர்ந்த பெண் கைதுpt desk
குற்றம்
ஈரோடு: ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசாவைச் சேர்ந்த பெண் கைது
ஈரோடு ரயில் நிலையம் வழியாக கஞ்சாவை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த இருப்புப்பாதை போலீசார் அவரிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதையாக உள்ள திப்ருக்கார் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில் நிலையம் வழியாக சென்றுள்ளது. அப்போது ஈரோடு இருப்புப்பாதை காவல்துறையினர் அந்த ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
arrestedpt desk
இதில், முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்ட ஒடிசாவைச் சேர்ந்த ஹூக்கா அலி என்ற பெண் வைத்திருந்த பையை சோதனையை மேற்கொண்டனர். அதில் 3.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஈரோடு இருப்புப்பாதை காவல்துறையினர் ஹூக்கா அலியை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.