சிலிண்டர் தட்டுப்பாடு web
தமிழ்நாடு

திருவண்ணாமலை| சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி.. இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் சிரமம்!

திருவண்ணாமலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

PT WEB

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எரிவாயு தகன மேடையில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய முறையில் பிரேதங்களை கட்டைகளில் அடிக்கி தகனம் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பு அபாயம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் காரணமாக உலகம் முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைநகரங்களில் காலை முதலே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதாகவும் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசானிய லிங்கம் அருகே உள்ள எரிவாயு தகனமேடையில் வணிக பயன்பாடு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் இறந்தவரின் உடலை எரிப்பதற்காக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசானிய லிங்கம் அருகே எரிவாயு தகன மேடை உள்ளது.

இந்நிலையில் இறந்தவர்களின் பிரேதங்களை எரிப்பதற்கு ஒரே நேரத்தில் ஆறு எரிவாயு சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என்றும் இரண்டு சிலிண்டருக்கு மூன்று பிரேதங்களை எரிக்க முடியும் என்றும் தற்போது கைவசம் பதினைந்து சிலிண்டர் மட்டுமே இருப்பில் உள்ளதாக வேதனையுடன் எரிவாயு தகன மேடை மேலாளர் கண்ணகி தெரிவித்தார்.

நவீன எரிவாயு தகனமேடை

இனிவரும் நாட்களில் இதே நிலைமை தொடர்ந்தால் பழைய முறைப்படி பிரேதங்களை கட்டைகளில் அடிக்கி மேலே விராட்டி வைத்து தகனம் செய்யப்பட கூடிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் இறந்தவர்களின் உடலை எரித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் அதேபோல் உலக பிரசித்தி பெற்ற கிரிவலப் பாதையில் தகன மேடை இருப்பதால் பிணங்கள் எரி ஊட்டும் போது அதிலிருந்து வரும் துர்நாற்றம் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை தெரிவித்தார்.

மேலும் எரிவாய்வு தகன மேடை அருகே ஈசான்ய லிங்கமும் பக்தர்கள் தங்குவதற்காக இந்து சமய அறநிலைத்துறையின் 100க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட தங்கும் விடுதிகள் உள்ளதாகவும் பிரேதங்களை எரி ஊட்டும் போது காற்று மாசுபாடு ஏற்படும் என்றும் வேதனையுடன் கண்ணகி கூறினார்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வுகாண வேண்டுமென்று எரிவாயு தகன மேடை மேலாளர் கண்ணகி கூறினார்.