எருது விடும் விழா pt desk
தமிழ்நாடு

தருமபுரி | சீறிப் பாய்ந்த காளைகள்.. சிதறி ஓடிய காளையர்.. இது பாலக்கோடு எருது விடும் விழா!

பாலக்கோடு அருகே பொங்கல் திருநாளை முன்னிட்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

PT WEB

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மீது தெளித்தனர்.

எருது விடும் விழா

இதையடுத்து காளைகளை ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட்டப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு விரட்டிச் சென்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. .

இந்நிலையில், இந்த எருதாட்டத்தை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர். மாரண்டஅள்ளி காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.