Chennai traffic changefile
தமிழ்நாடு
காணும் பொங்கல் கொண்டாட்டம் - சென்னையில் நாளை போக்குவரத்தில் மாற்றம்!
காணும் பொங்கலையொட்டி சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், காணும் பொங்கலையொட்டி முக்கிய பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
காமராஜர் சாலையில் மக்கள் எண்ணிக்கை அதிகமானால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திரும்பி வாலாஜா சாலையில் சென்று இலக்கை அடையலாம்
சென்னை போக்குவரத்தில் மாற்றம்pt desk
அதேபோல்; வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
கண்ணகி சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி ஒருவழிப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரியாக செயல்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.