மாவட்ட ஆட்சியரிடம் மனு  pt desk
தமிழ்நாடு

தருமபுரி | ஒரு கட்சியின் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியரிடம் மனு

தருமபுரி ஜல்லிக்கட்டுப் போட்டி ஒரு கட்சி சார்பாக நடத்த அனுமதிக்கக் கூடாது. அரசே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி அடுத்த தடங்கம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பதற்கு கால்கோள் பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து போட்டி நடத்துவதற்குத் தேவையான வாடிவாசல், பார்வையாளர் மாடம், உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

Jallikattu Field

தற்போது தவெக-வின் பொதுச் செயலாளர் ஆனந்த் வருவதாக துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டுப் போட்டி என்பது பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். எந்தக் கட்சியைச் சார்ந்து இருக்கக் கூடாது. எனவே ஒரு கட்சி சார்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது. மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து நார்த்தம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் தனிப்பட்ட கட்சி சார்ந்து நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்தனர்.