அடி பம்ப்-ஐ அகற்றாமல் அமைக்கப்பட்ட சிமெணட் சாலை pt desk
தமிழ்நாடு

தருமபுரி | அடி பம்ப்-ஐ அகற்றாமல் அமைக்கப்பட்ட சிமெணட் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

பொம்மிடி பேரூராட்சியில் அடிபம்ப்-ஐ அகற்றாமல், கான்கிரீட் கலவை கொட்டி சாலை அமைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 7-வது வார்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரிடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அடி பம்பு மூலம் குடிநீர் எடுத்துள்ளனர்.

அந்த பம்ப் கடந்து சில நாட்களாக பயன்பாட்டில் இல்லாததால், சிமெண்ட் சாலை அமைக்கும் பொழுது, அதை அகற்றாமல், முழுவதுமாக மூடி கான்கிரீட் கலவை கொட்டி மேலேயே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வரும் குழாய்க்கும் சிமெண்ட் தரைக்கும் இடையே இரண்டு மூன்று சென்டிமீட்டர் அளவிற்கு இடைவெளி இருந்து வருகிறது. ஒப்பந்ததாரர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரின் செயலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.