ஈஷா யோகா மையம் முகநூல்
தமிழ்நாடு

ஈஷா யோகா மையத்தில் என்ன நடக்கிறது?...வீடியோ வெளியிட்ட யூடியூபர்; நீக்க சொன்ன நீதிமன்றம்!

அதற்கு எதிராக ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா யோக மையம் தரப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

PT WEB

ஈஷா மையம் மற்றும் ஜக்கி வாசுதேவ் குறித்த யூடியூப் வீடியோவை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூடியூபர் ஷியாம் மீரா சிங் என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்ற பெயரில் வெளியிட்ட வீடியோ ஒன்று, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதற்கு எதிராக ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா யோக மையம் தரப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களது அமைப்பு பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை உள் நோக்கத்துடன் பரப்பி அமைப்பிற்கு அவபெயர் ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா மையம் தொடர்பாக குறிப்பிட்ட நபர் பதிவேற்றம் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவு பிறப்பித்தார்.