வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் பேசியதை விமர்சித்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஸ்டோரியில், ”மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள நபர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதோடு, Mental Health Matters.” என்ற ஹேஷ்டேக்கை அவர் பதிவிட்டுள்ளார்.
“ஞாயிற்றுக்கிழமைகளில் என் நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களை வேலைசெய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்.
நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். என்னுடைய சீன நண்பர் ஒருவர், ’சீனாவால் அமெரிக்காவை வெல்ல முடியும். காரணம், சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள்; அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்’ என்றார். அப்படியானால் அதுதான் உங்களுக்கான பதில். நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.