ஃபெஞ்சல் முகநூல்
தமிழ்நாடு

வேகம் அதிகரித்த ஃபெஞ்சல்| பிற்பகலில் கரையை கடக்கவில்லை-வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டநிலையில், மாலையில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்த புயல் ஃபெஞ்சல்  தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்கிறது.. இதன்படி, வங்கக்கடலில் உருவான புயலின் வேகம் அதிகரித்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையிலிருந்து 140 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மேலும், இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டநிலையில், மாலையில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.