Actor Ajith, Tushar Deshpande
Actor Ajith, Tushar Deshpande pt desk
தமிழ்நாடு

’brilliance in simplicity’ - அஜித்தை சந்தித்த CSK வீரர்..! இணையத்தில் பறக்கும் கமெண்ட்டுகள்!

webteam

நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், நேற்று தனது 24 வது திருமணநாளை கொண்டாடினார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தேர்தலில் வாக்களிக்க சென்னை வந்த நடிகர் அஜித், தனது மனையுடன் திருமண நாளையும் கொண்டாடினார்.

Ajith Shalini

24 ஆண்டுகால திருமண பயணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிய அமர்களம் ஜோடியின் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அஜித்துடன் ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அது தொடர்பான வீடியோவும் வைரலானது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரும் அஜித்தை சந்தித்துப் பேசினார்.

ஆம், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித்தை சந்தித்துப் பேசினார்.

அவர்கள் சந்தித்துக் கொண்ட போட்டோவை இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ள துஷார்தேஸ் பாண்டே, ’brilliance in simplicity’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு சென்னை அணி ரசிகர்களும், நடிகர் அஜித்தை நேசிப்பவர்கள் பலரும் கமெண்ட்கள் மூலமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Shooting spot

இதனிடையே வரும் மே 1ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தான் நடிகர் அஜித் அஜர்பைஜான் நாட்டிற்குச் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.