விஜய்க்கு உற்சாக வரவேற்பு pt desk
தமிழ்நாடு

TVK | பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கில் பங்கேற்க வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு

கோவையில் நடைபெறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கிற்கு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

கோவை குரும்பபாளையம் பகுதியில் இன்றும் நாளையும் (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய 2 நாட்களில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தனி விமான மூலம் வந்த அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு, கோவை விமான நிலைய வளாகத்திலேயே 2000 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு ஷஉற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து பிரத்தியேக கேரவனில் வந்த விஜய் அவ்வப்போது வெளியே வந்து தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்தும் அவர்கள் வீசிய துண்டுகளை மாலையாக அணிந்தபடியும் சென்றார். விமான நிலையம் முகப்பிலிருந்து அவிநாசி சாலை சந்திப்பு வரை தொண்டர்கள் தலைகளாகவே தென்பட்டது. சில இடங்களில் மரங்களிலிருந்து தொண்டர்கள் விஜய் வந்த வேன்மீது விழுந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு துண்டு அணிவித்த விஜய், அவர்களை கீழே இறங்கிச் செல்ல அறிவுறுத்தினார். பிறகு சாலை மார்க்கமாக விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு விஜய் சென்றார். விஜய் வருகையால் அவிநாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.