செய்தியாளர்: சுதீஷ்
கோவை அடுத்த சூலூர் பகுதியில், நட்சத்திர உணவு விடுதிகளுக்கு பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது ஏசியில் இருந்து கசிவு ஏற்பட்டு வாயு அறையில் பரவியுள்ளது.
இதனால் தலைச் சுற்று மற்றும் மயக்கம் அடைந்து பல பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 ஆம்புலன்ஸ்களில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.